ராமநாதபுரம் மேம்பாலத்தில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

கோவை திருச்சி ரோடு ராமநாதபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற ஒரு கார் டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கோவை அரசு மருத்துவ மனைக்கு நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வேனும் சிக்கியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் போக்குவரத்து போலீசார்உடனடியாக ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு பிறகு போக்கு வரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.