இறைச்சி கழிவுகள் மற்றும் அழுகிய காய்கறிகளால் விபத்து..!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள்  20 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது இறைச்சி கழிவுகள் மற்றும் அழுகிய காய்கறிகள் தேசிய நெடுஞ்சாலை பள்ளிவாசல் அருகில் அனுமதி இன்றி கொட்டப்பட்டு வருகிறது இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் விசுவதோடு இறைச்சி கழிவுகளுக்காக தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டு சாலையில் குறுக்கே பாய்ந்து செல்கிறது இதனால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது மேலும் கால்நடைகள் சாலையில் குறுக்கே நின்று கொண்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க கோரி தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர் மேலும் இதனால் வாகன விபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்