ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வெளிநாடு சென்று பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி செயலாளரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான திரு.K.C. கருப்பணன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் துபாயைச் சேர்ந்த டிஸர்வ் இன்டர்நேஷனல் ( Deserv International,Dubai) கம்பெனியின் மனிதவள மேலாளர் திருமதி கீதாஞ்சலி ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் திரு.P.குழந்தைவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் திரு.S.பிரகதீஸ்வரன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று நினைவு கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்த வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை – டெக் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளைச் சேர்ந்த இயந்திரவியல் துறை மற்றும் தானியங்கி துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நேர்காணலில் தேர்வு பெற்ற 20 மாணவர்களுக்கு கல்லூரியின் செயலாளர் திரு.K.C. கருப்பணன் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி பாராட்டினார்.இறுதியில் கல்லூரியின் இயந்திரவியல் துறை பேராசிரியரும் வேலை வாய்ப்பு பொறுப்பாளருமான திரு.P.கோகுல்நாத் நன்றியுரை வழங்கினார்.