நீலகிரி மாவட்ட NDABBA மிஸ்டர் நீலகிரி 2024 பாடி பில்டர்ஸ் சந்திப்பு என்ற இந்த அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் 29 உடற்பயிற்சி மையங்கள் இருந்து உடற்பயிற்சி போட்டியாளர்கள் 200க்கும் மேற்பட்ட வாலிபர்கள் உடற்பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர், குன்னூரில் உள்ள ஜான்சன் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் உதகமண்டலம் அபு பாபாஜி அறக்கட்டளை வளாகத்திற்குள் அமைந்துள்ள லேக் சைட் பிட்னஸ் சென்டர் என்ற உடற்பயிற்சி கூடத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் கே. சிவக்குமார் தலைமையில் நீலகிரி மாவட்ட அளவில் ஆணழகன் போட்டிநடைபெற்றது, நடைபெற்ற போட்டியில் 200க்கும் மேலான போட்டியாளர்கள்
குன்னூர் கூடலூர் கோத்தகிரி உதகை போன்ற பகுதியிலிருந்து வாலிபர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர், விழா தொடர்ச்சியாக நிகழ்ச்சியின் வரவேற்புரை கிளட் ஆண்டனி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்,
விழாவில் கலந்து கொண்ட நீலகிரி உடற்பயிற்சி கூடம் மாவட்ட தலைவர் பாஸ்கர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் கே சிவக்குமார், பொருளாளர் நானி இப்ராஹிம், துணைச் செயலாளர் D.R. வினோத்,நிஷாந்த் சங்கத்தின் பிரதிநிதி, இருந்து அபிஷேக் பிராங்கிளின், சிவா, சுகேல்,அசார், பிரபு, பவித்ரன், கலந்தர், அப்துல், வரதராஜ், ரிஸ்வான் ஆகியோர் ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர், அங்கு உள்ள முறையாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர் பி ஆர் வினோத் அவர்கள் தலைமையில் பங்கேற்றனர், இதில் அபிஷேக் பிராங்க்ளின் அவர்கள் மென்ஸ் பிசிக் பிரிவில் முதலிடமும் பெற்று வெற்றி பெற்றார், சிவா அவர்கள் இரண்டாம் இடமும், மற்றும் 70 எடை பிரிவில் ஆணழகன் போட்டியில் அபிஷேக் பிராங்கிளின் முதலிடமும் பெற்றார், 65 எடை பிரிவில் ஆணழகன் போட்டியில் சிவா அவர்கள் முதலிடமும், மற்ற பங்கேற்பாளர்கள் அடுத்துள்ள மூன்று நான்கு ஐந்து போன்ற இடங்களையும் பிடித்தனர், இவ்வாண்டு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பலர் கலந்து கொண்டு பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் பயிற்சியாளர் தனது வாழ்த்துக் களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். ஜும் உரிமையாளர் விமல் போட்டி யில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், பயிற்சியாளர் அவரகளுக்கும் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது, சிறப்பு விருந்தினர் களாக விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சிவக்குமார், முகமது அலி, நானி இப்ராஹிம், ரஃபிக், முகமது அலி, அயூப், ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார், நடைபெற்ற ஆணழகன் போட்டியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர், விழாவில் சிறப்புரையாற்றிய DR. வினோத் துணைச் செயலாளர், லேக் சைட் பாடி பில்டர் பயிற்சியாளர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் NDABBA மிஸ்டர் நீலகிரி சார் பில் குன்னூர் கூடலூர் கோத்தகிரி உதகை போன்ற இடங்களில் ஆணழகன் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருடதொரம் நடைபெறும் என்றனர், உடற்பயிற்சி முக்கியத் துவம் தற்போது வாலிபர்கள் மத்தியில் காணப்படும் போதிய அடிமை, குடிப்பழக்கம், பலவிதமான தீய பழக்கங்கள் இருந்து விடுவிக்க உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினர், நடைபெற்று நீலகிரி மாவட்ட ஆணழகன் போட்டியில் 29 உடற்பயிற்சி மையத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட உடற்பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், அனைத்து விழா ஏற்பாடுகளையும் நீலகிரி உதகை அபூ பாபாஜி டிரஸ்ட் மற்றும் லேக் சைடு பிட்னஸ் செய்து தந்தனர், நிகழ்ச்சி ஏற்பாடுகள் D.R. வினோத் செய்தித்துறை , விழா நினைவாக வருகை தந்த அனைவருக்கும் ரபீக் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0