ஆவின் வெண்ணெய் விலை அதிரடி உயர்வு : இன்று முதல் அமுலாகிறது – பொதுமக்கள் கவலை ..!

மிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால் மட்டும் இன்றி வெண்ணெய், ஐஸ்கிரீம் உட்பட 200 வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக திமுக தம்பட்டம் அடித்துக் கொண்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியது. அதேபோன்று சிவப்பு நிற பால் பாக்கெட் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் இன்று வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சமையல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் வெண்ணெய் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று உப்பு கலந்த வெண்ணை 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆகவும், 500 கிராம் வெண்ணெய் 255 ரூபாயிலிருந்து 265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆவின் நிறுவன பொருட்களின் உயர்வாள் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.