கொத்தனார் கொலையில் ஆசை நாயகி கைது

சென்னை திருவான்மியூரை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் பின்புறமாக சங்கர் வயது 60. தகப்பனார் பெயர் சின்னத்தம்பி. மருதம் தெரு திருவள்ளுவர் நகர் பெருங்குடி சென்னை என்பவன் உடலெங்கும் காயத்துடன் பிணமாக இருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் ஹாஷினி எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷிற்கு கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் திருவான்மியூர் ரயில்வே சப் இன்ஸ் பெக்டர் பரந்தாமன் ஆகியோர் இறந்து போன சங்கர் கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும் அவனை யார் கொலை செய்தார்கள் என தீவிரமாக விசாரணை செய்ததில் பெருங்குடியைச் சேர்ந்த 1 வது தெரு சத்தியா நகர் நாகாத்தம்மன் தியாகராஜன் என் மனைவி முனியம்மாள் வயது 48. இவள் கொலை செய்யப்பட்ட சங்கரின் ஆசை நாயகியாக இருந்துள்ளாள். இவள் தான் ஷங்கரை குடிபோதையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாள். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முனியம்மாளை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.