இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை . 2 பேர் கைது.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர்கள் குடியிருக்கும் வீட்டின் எதிரே வசிக்கும் இளம் பெண்ணை பார்த்து அந்த வாலிபர்களில் ஒருவர் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரிடம் போய் கேட்டுள்ளனர் .அதற்கு அந்த வாலிபர் முறையாக பதில் சொல்லவில்லை. இந்த நிலையில் ஏற்பட்ட மோதலில் அந்த வாலிபர் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.உதவி கமிஷனர் ரவிக்குமார் வேட்பாவையில் …