கோவையில் மகனுடன் இளம்தாய் திடீர் மாயம்..!

கோவை அம்மன் குளம், புது அவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 37) பெயிண்டர்.இவரது மனைவி ஐஸ்வர்யா தேவி ( வயது 30) மகன் சதுர்த்தியன் ( வயது 6) கடந்த 30 ஆம் தேதி சத்யராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த அவரது மனைவியையும் மகனையும் காணவில்லை.பல இடங்களை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.