குடிபோதையில் பைக் ஓட்டி சென்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி..

கோவை : தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் பக்கம் உள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி, இவரது மகன் பட்டாணி ஆறுமுகம் (வயது23) இவர் சூலூரில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தீபாவளி தினத்தில் இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கோவை- திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் பைக் மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை செந்தூர் பாண்டி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.