கோவை அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து வட மாநில வாலிபர் தற்கொலை

கோவை மார்ச் 12 ஒடிசாவைச் சேர்ந்தவர் ராதிஷ் ஷாம் .இவரது மகன் ராமச்சந்தர்( வயது 35) இவர் கோவை சித்ராவில் தங்கி இருந்து கார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் கடித்தது. அதன் பிறகு அவர் மூச்சு விட சிரமப்பட்டு வந்தார் .இதனால் அவர் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை 11 மணிக்கு கோவை அரசு மருத்துவ மனைக்கு வந்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோவை அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடம் இரண்டாவது மாடியில் உள்ள வெறிநாய்க்கடி தனிவார்டில் மதியம் 1 -30 மணிக்கு உள் நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தனர் அந்த வார்டில் ராமச்சந்திரன் மட்டும் அனுமதிக் கப்பட்டு இருந்தார். அவர் மதியம் 2 மணி அளவில் திடீரென நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு ஒடி வந்தார் .அதை பார்த்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் வார்டில் உள்ள படுக்கை களில் தாவி குதிப்பது , கதவுகளை உடைப்பது போன்ற செயலில் ஈடுபட்டார். அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது இதுகுறித்து தீயணைப்பு படைவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் நோயாளிகளின் விவரங்களை ஒட்டும் தகவல் பலகையில் இருந்த கண்ணாடியை உடைத்தார். அதிலிருந்து கண்ணாடி துண்டை எடுத்து ராமச்சந்திரன் தனது கழுத்தை திடீரென்று அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர் ஆனாலும் அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் கோவை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.