பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு. நண்பர் படுகாயம்.

கோவை சாய்பாபா காலனி என். எஸ் .ஆர் ரோட்டில் உள்ள பி. அண்டு. டி. ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி தனலட்சுமி.இவர்களது மகன் ஸ்ரீ சபரீஷ்வரர் ( வயது 19) இவர் நேற்று சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி முகாம்பிகை நகரைச் சேர்ந்த தனது நண்பர் ஈஸ்வந்த் (வயது 19) என்பவருடன் “புல்லட் ” மோட்டார் சைக்கிளில் சேலம் – கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மதுக்கரைஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டேரஸ் லாரியை ஸ்ரீ சபரீஷ்வரன் முந்தி செல்லமுயன்றார். அப்போது லாரி மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீ சபரி ஈஸ்வரர் அதே இடத்தில் இறந்தார். பைக்கில் பின்னால் இருந்து வந்த ஈஸ்வந்த்படுகாயத்துடன் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீ சபரீஷ்வரர் தாயார் தனலட்சுமி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக டேரஸ் லாரி டிரைவர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.