கோவை : திருவாரூரை சேர்ந்தவர் ரவி . இவரது மகன் விஜயராகவன் ( வயது 44) இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சூலூர் பக்கம் உள்ள செங்கத்துறையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வரும் தனது தந்தை ரவியுடன் இருந்து வந்தார்.கடந்த 2 ஆம் தேதி இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (வயது 45) என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்தார்.பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சாப்பிட சென்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயராகவனை தடியால் தாக்கி கொலை செய்துவிட்டு பிணத்தை சாக்கடையில் வீசிவிட்டு ஒடிவிட்டார். .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அதே பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையாளியின் உருவம் தெளிவாக தெரிந்தது இதைத்தொடர்ந்து கொலையாளி திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (வயது 37)) என்பது தெரியவந்தது.அவரை சொந்த ஊருக்கு சென்று போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்..
அப்போது ஸ்டாலின் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது :- நானும் விஜயராகவனும் நண்பர்கள். நான் விஜயராகவன் இருக்கும் வீட்டில் தான் தங்கி இருந்து கட்டிட தொழிலாக வேலை செய்து வந்தேன். அப்போது அவன் நான் சொல்கிற படிதான் நீ கேட்க வேண்டும் என்று அடிக்கடி என்னை மிரட்டி வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இருவரும் சேர்ந்து மது அருந்தி னோம்..அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று விஜயராகவன் எனது உடைமைகளை தூக்கி வெளியே வீசிவிட்டு என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று என்றான். மது போதையில் இருந்த நான் கோபத்தில் கீழே கிடந்த உருட்டு கட்டை எடுத்து அவன் தலையில் இரண்டு தடவை ஓங்கி அடித்தேன் அதில் மயங்கிகீழே விழுந்தான்.ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளி மேலே கல்லை போட்டு மூடி விட்டேன் .மறுநாள் காலை நான் ஊருக்கு போக வேண்டும் என்று கூறி மேஸ்திரி ரவியிடம் எனது சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்று விட்டேன் .அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த என்னை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார் .கைது செய்யப்பட்ட ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.