கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு ,கெம்மனூர் சுற்றுக்குட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ரங்கன் என்ற ரங்கசாமி ( வயது 45) இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு நேற்று மாலை 7.30 அளவில் சென்றார். அப்போது அங்கு வந்த காட்டு யானை எதிர்பாராத விதமாக இவரை தாக்கியதில் காயமடைந்தார். வனப்பணியாளர்கள்காயமடைந்த ரங்கசாமியை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் காட்டு யானையை தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0