கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி குடியிருந்து வந்தார்.இந்த நிலையில் இவரதுவீட்டில் முதல் தளத்தில் வசித்து வரும்வின்சி வில்லியம்ஸ் என்பவர் ஜெயந்திக்கு போன் செய்து அவரது வீட்டில் வாடகைக்கு குடி இருந்து வந்த கருப்பசாமி என்ற கோபியின் திறந்து கிடப்பதாகவும்,அங்கு ஒருவர் ரத்த காயத்துடன் கிடப்பதாகவும் தகவல் தெரிவித்தார். இது குறித்து ஜெயந்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தவர் உடலை மீட்டு மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை அவர் கருப்பசாமி என்ற கோபி என்பது தெரியவந்தது.குடிபோதையில் முத்துகிருஷ்ணனுக்கும், கருப்பசாமிக்கும் இடையேஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக தெரியவந்தது. .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0