கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிவிசாரணை கைதி என 2500 க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த சிறையில் கைதிகள் வேலை செய்யும் தொழிற்சாலையும் உள்ளது. அது போன்று 2 பெட்ரோல் பங்குகள் உள்ளது. இதில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். கடந்த மாத 27ஆம் தேதி நெல்லையைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற ஆயுள் தண்டனை கைதிசிறைக்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் குற்றவாளி யார்? என்பது தொடர்பாக 4 தனி படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.. இந்த நிலையில் ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில் இருக்கும் கைதியான தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள தட்ட பாறையை சேர்ந்த விக்ரம் ( வயது 29) என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஒரு நிமிடம் இந்த வீடியோவில் பரபரப்பு புகார் கூறியு ள்ளனர். அந்த வீடியோவில் எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. எந்த நேரத்தில் என்ன வேண்டு மானாலும் நடக்கலாம். சிறையில் இருக்கும் மோகன் ராம், கிருபாகரன், சதீஷ், பாலு ஆகியோரால் என்உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே ஒருவரை கொன்று விட்டனர். அடுத்த குறி நான் தான். சிறையிலே கைதிகளுக்கு பாதுகாப்பில்லை.எப்படி எங்கிருந்து வந்து கொலை செய்கிறார்கள்? என்று தெரியவில்லை.. ஆனால் கொன்று விடுகிறார்கள். என்ன ஆயுதத்தை வைத்து கொலை செய்கி றார்கள் என்றும் தெரியவில்லை. எனக்கு என்ன நடந்தாலும் அந்த 4பேரும் தான் பொறுப்பு என்று பேசியிருக்கிறார். கோவை மத்திய சிறையில் கைது கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கைதி ஒருவர் தனது உயிர் ஆபத்து என்று கூறி வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து கோவை மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையை சேர்ந்த விக்ரம் மீது 2 கொலை வழக்கு உள்ளது. அதில்ஆயுள் தண்டனை பெற்ற அவர் கடந்த 20 17 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதால் கடந்த 20 22 ஆம் ஆண்டு கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இதுபோன்று தவறான குற்றச்சாட்டை கூறினார் .தற்போது அது போன்று மீண்டும் கூறியுள்ளார். சுயவிளம்பரத்திற்காக அவர் இதுபோன்று செய்து வருகிறார். கோவை மத்திய சிறையில் கைதிகள் வீடியோ கால் பேசும் வசதி உள்ளது. அந்த வசதியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார்.. இருந்த போதிலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0