கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம் நேற்று குனிய முத்தூர்,பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்களை ( குட்கா )மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குனியமுத்தூர் பாரதி நகர் சேர்ந்த இஸ்மாயில் ( வயது 61)அழகச்சி தோட்டம் ரம்யா (வயது 32) காளிமுத்து (வயது 32) கரும்புக்கடை நந்தகுமார் ( வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 5 கிலோ 628 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0