கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது பெற்றோர்மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் காவல் நிலை யத்தில் புகார் செய்தனர் இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னூர், பக்க முள்ள எல்லப்பாளையம்,சுக்கிர மணி கவுண்டன் புதூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 36 )என்பவரைகைது செய்துசிறையில் அடைத்தனர். அவரைகுண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், விஜயகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் .இந்த உத்தரவின் பேரில் விஜயகுமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0