தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

கோவை துடியலூர் பக்கம் உள்ள உரு மாண்டம் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளைவுட் தொழிற்சாலை உள்ளது.. கடந்த 9-ஆம் தேதி தொழிற்சாலையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று தொழிற்சாலையில் இருந்துபுகை வருவதாக அவருக்கு தகவல் வந்தது. அவர் வந்து பார்த்தபோது தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து துடியலூர் போலீசில் அந்த நிறுவனத்தின் மேனேஜர் ரவிக்குமார் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.