கோவை: கேரளாவில் வருகிற 26-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை யடுத்துகேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதியில்அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.. நேற்று அந்த வழியாக கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால் கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0