சென்னையில் பெரும்பாலான பகுதியில் இளம் வயது இளைஞர்கள் அதிக போதைக்காக வெறித்தனமாக ஆசைப்பட்டு கொண்டு பெரும்பாலான இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடம்பில் செலுத்தி கொள்கின்றனர் இதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன இந்த போதை ஊசிகளுக்கு அடிமையாகி விட்டு முழு நிர்வாண நிலையில் ஆடைகளை களைந்து விட்டு டப்பாங்குத்து டான்ஸ் ஆடுவார்கள் போதை தலைக்கு ஏறியதும் வெறித்தனமாக தங்களது உயிரையும் மாய்த்து கொள்வார்கள் புளியந்தோப்பு தட்டாங்குளம் சத்தியப்பன் தெருவை சேர்ந்தவர் கோகுல் வயது 22 எலக்ட்ரிக்கல் கடையில் சேல்ஸ்மேன் வேலை செய்து வந்தார் அப்போது போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டார் வேலைக்கு செல்லாமல் நடுவீதியில் படுத்து கிடப்பாராம் புளியந்தோப்பு தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே தனது நண்பர்களுடன் போதை ஊசி ஏற்றிக்கொண்டு முழு நிர்வாண கோலத்தில் டப்பாங்குத்து டான்ஸ் போட்டாராம் தன்னால் தாங்க முடியவில்லை என அலறிக்கொண்டே மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாராம் இதைப் பார்த்த அவரது நண்பர்கள் வீட்டிற்கு தூக்கி சென்று ஒப்படைத்துள்ளனர் சுயநினைவு இல்லாமல் கோகுல் படுத்திருப்பதைக் கண்டு அவரது தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கோகுலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் சோதித்த டாக்டர்கள் கோகுல் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் போதைப் பொருட்களை யார் விற்பனை செய்கிறார்கள் என்ற முழு விவரம் போலீசாருக்கு நன்கு தெரியும் தங்கள் வீட்டு நபர்களுக்கு போதைப் பொருட்கள் அடிமையானவர்களா இல்லையா என்ற விவரமும் நன்கு தெரியும் அவர்களுடைய விவரமும் நன்றாக தெரியும் இது குறித்து காவல் நிலையத்திற்கு சென்று முழு விவரமும் அறிவிக்க வேண்டும் போலீசார் அரசு அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட இளைஞர்களை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் அப்போதுதான் இந்த இளைஞர்களின் உயிர் இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0