கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ,ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர்வீட்டை திறந்து போட்டுவிட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போதுஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து அங்கிருந்த 2 செல்போனை திருடி கொண்டு கொண்டு தப்பி சென்றுவிட்டார். இது குறித்து கவிதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வடவள்ளி ,வேம்பு அவென்யூ, தாமரை வீதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 25 )என்வரை கைது செய்தார் .இவரிடம் வந்து 2 செல்போன்கள் மீட்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0