கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி இவர் நேற்று அங்குள்ள முனிசிபாலிட்டி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் குடிபோதையில் அங்கு சென்று அந்த குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தினாராம். இதுகுறித்து முனிசிபாலிட்டி நிர்வாக அதிகாரி ஆனந்தன் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தார். இவர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0