தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை. 6 பேர் கைது

கோவை; மதுரையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33 )பெயிண்டர் இவரது மனைவி சரண்யா (வயது 31) கார்த்திக் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சூலூரில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கார்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் கார்த்திக் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதிக்கு சென்று வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் சூலூர் வந்தார் .அப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அனை வரும் சேர்ந்து மது குடித்தனர் இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் பிரகாஷ் (வயது 29 )தமிழ் இனியன் ( வயது 19) சதீஷ்குமார் (வயது 19) வெங்கடேசன் ( வயது 25) சங்கர் ( வயது 20) தாஜுதீன் ( வயது 19 ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது கார்த்திக் மற்ற 6பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரமடைந்த கவதம் |பிரகாஷ் உட்பட 6பேர் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்தினார்கள். அதில் அவர் கீழே விழுந்தார். பிறகு அங்கு கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். கார்த்திக் கை அக்கம் பக்கம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். .இது தொடர்பாக சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து கார்த்திகை கொலை செய்துவிட்டு தப்பிய சூலூர் சேர்ந்த கவுதம் பிரகாஷ் ,தமிழ் இனியன், சதீஷ் குமார், வெங்கடேசன் சங்கர் தாஜுதீன் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தார். இவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.