பைக்கை வழிமறித்து வாலிபர் வெட்டி கொலை. 3 பேருக்கு வலை.

கோவை அருகே உள்ள வெள்ளலூர், அவுசிங் யூனிட்டைசேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் இன்பரசு ( வயது 19) பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . இவர் தினமும் தனது நண்பருடன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஒரு பகுதியில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது .அங்கு இன்பரசு தனது நண்பர்களுடன் பிளம்பிங் மற்றும் வயரிங்வேலை செய்து வந்தார். நேற்று காலை யில் அவர் தனது நண்பருடன் வழக்கம்போல் அந்த பகுதிக்கு வேலைக்கு சென்றார். அப்போது வயரிங் வேலைக்கு சில பொருட்கள் தேவைப்பட்டது. இதனால் தனது நண்பருடன் இன்பரசு கடைக்குச் சென்றார். பின்னர் தேவையான பொருட்களை வாங்கியதுடன் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு டீ மற்றும் வடை வாங்கினார் .இதை யடுத்து அவர் தனது நண்பருடன் அந்தப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இன்பரசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட அவரது நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார். வேலை நடந்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையம் ரோட்டில் வந்த போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று இன்பரசன் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் இன்பரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். தனது கண்முன் இன்பரச னை வெட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த 3 பேரும் ஏதாவது சத்தம் போட்டால் உன்னையும் வெட்டிக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் இன்பரசுக்கு தலை 2 கைகளில் சர மரியாக வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்தது மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், போத்தனூர் உதவி கமிஷனர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இன்பரசனின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்பரசனின் நண்பரிடம் விசார ணை நடந்து வருகிறது. எதற்காக 3பேர் கொண்ட கும்பல் இன்பர்சனை வெட்டிக் கொன்றது? என்று தெரியவில்லை. இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ,ஆகாஷ், சுகில் ஆகியோர்தான் இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்தது இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.