புத்தாண்டில் பைக் விபத்தில் வாலிபர் சாவு. ஒருவர் படுகாயம்

கோவை; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வெங்கனூரைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகன் ஸ்ரீதர் ( வயது 21) இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். புத்தாண்டு தினத்தில் இவரும் வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த கருப்பசாமி மகன் பழனி (வயது 22) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஆர். எம். புதூர் – ஆனைமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலைத் திடுமாறு இருவரும் கீழே விழுந்தனர் .இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் பைக் ஓட்டிவந்த ஸ்ரீதர் வழியில் இறந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தாயார் குப்பம்மாள் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.