இருகூரில் பைக் விபத்தில் வாலிபர் சாவு.

கோவை இருகூர் மார்க்கெட் ரோடு, மணியன்மருதாச தேவர்வீதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மகன் ராம்குமார் ( வயது 33) இவர் நேற்று இருகூர் ஜின்னிங் பேக்டரி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் ராம்குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது தந்தை விஸ்வநாதன் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கமணி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.