மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை : தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், துரை ராஜபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் இவரது மகன் முத்து செல்வம் (வயது27) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று கோவை – பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு கல்லூரி அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துச்செல்வன் அதே இடத்தில் இறந்தார் இது குறித்து கோவில் மேற்கு பகுதி போக்குவரத்துக் கொலனாய் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்..