கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை .

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள பகவதிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கிரி (வயது 20) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை..இதை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிரி அங்குள்ள ஒரு தோட்டத்துகிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாயார் செல்வி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.