கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த umagine tn தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது தமிழகத்தின் நிலையான எதிர்காலத்துக்கு வழிவகை அளிக்கும் மாநாடு தான் இது என்றும் வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் தமிழகம் முன்னோடி யாக உள்ளது என்றும் தெரிவித்தார். மூன்றாவது முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கோவையில் ஏஐ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் சைபர் பாதுகாப்புக்கு அரசு முக்கியத் துவம் அளித்து வருவது என்றும் அவர் கூறினார். சிறிய நகரங்களில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும் வளர்ச்சி என்பது நகரத்தில் மட்டு மில்லாமல் சமச்சீராக, மாநிலம் முழுவதும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சி போதும் என்று நான் நினைத்ததே இல்லை என்றும் தமிழகத்திற்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0