டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை. 329 மது பாட்டில் பறிமுதல். 2 பேர் கைது.

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ,சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோ நேற்று பெரிய கடை வீதி. லங்கா கார்னர்,ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில்நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதிகாலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக விருதுநகர் மாவட்டம் செல்வகுமார் (வயது 64) கைது செய்யப்பட்டார். 36 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல உக்கடம்,என். எச் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் எண் ( 18 64 )சோதனை நடத்தப்பட்டது. அங்குசட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குமரேசன் (வயது 42) கைது செய்யப் பட்டார். 293 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.