கோவை வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரீஸ் கூறியதாவது:- புதுச்சேரி அருகே கரையை கடந்து சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) புயல் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கோவை நகரில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதே நேரத்தில் அது எதிர்கொள்ள தயாராக இருப்பது சரியான முன் எச்சரிக்கையாகும். 47 ஆண்டுகளுக்குப் பிறகுகோவை வழியாக புயல் கடக்கிறது.. புயல் மழையை அதாவது 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நாம் நேரடியாக பார்க்கப் போகிறோம். கோவையை கடக்கும் போது அது வலுவிழந்து இருக்கும் இதனால் மழை மேகங்கள் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைவரும் பாதுகாப்ப இருக்க வேண்டும். இதேபோல நீலகிரி மாவட்ட மக்கள் பாது காப்பாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கான பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புயல் வழி விழக்கும் போது கொங்கு மண்டல மாவட்டங்களின் மற்ற பகுதிகளில் பரவலாக கன மழை பெய்யும் இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0