கோவை டாடாபாத், ஹட்கோ காலனி ,அண்ணா நகர் பகுதியில் சங்குனூர் ஓடை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடிக்கொண்ட வீடு இருந்தது .ஆக்கிரமித்துகட்டப்பட்டிருந்ததால் கடந்த10 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதைபடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை பொக்லைன் எந்திரமூலம் அகற்றப்பட்டது. பின்புறம் வீட்டை அகற்றியதால் சுரேஷ் தனது குடும்பத்துடன் வேறு வீடு பார்த்து சென்று விட்டார். இதனால் அந்த வீடு காலியாக இருந்தது. நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை சங்கனூர் ஓடை ஓரம் சுவர் அமைக்கும் பணி நடந்தது. நேற்று இரவு 9 – 15 மணியளவில் திடீரென்று அந்த 2மாடி கட்டிடம் சரிந்து கீழே விழுவது போன்று அசைந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அருகே இருந்த ஓட்டு வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டது . சிறிது நேரத்தில் அந்த 2 மாடி கட்டிடம் இடிந்து சீட்டுக்கட்டு சரிந்து விழுந்தது போல 2 வீடுகள் மீது விழுந்தது .இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். 2 மாடி வீடு இடித்து விழுந்த சம்பவத்தை அறிந்ததும் இரவில் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இந்த வீட்டில்இருந்து சுரேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 15 நாட்கள் முன்பு காலி செய்துவிட்டுவேறு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஓடையில இருந்த 2 மாடி வீடுஇடிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 2 மாடி வீடு இடிந்த இடத்தில் 10 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கனூர் ஓடைக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை பணியாற்றி வருவார்கள். ஆனால் நேற்று மட்டும் இரவு 9 மணி வரை அங்கு வேலை பார்த்து பார்த்துச் சென்றனர் . 9 – 15 மணிக்கு அந்த 2 மாடி வீடு இடிந்து விழுந்துள்ளது. 15 நிமிடம் அங்கு தாமதித்து இருந்தால் 10 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டின் கட்டிட ஈடுபாட்டுக்குள் சிக்கி பலியாகி இருப் பார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0