குழந்தை பருவத்தில் பெற்றோர்களை இழந்த மகன் தூக்கு போட்டு தற்கொலை

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள காளியாபுரம், சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மணிகண்டன் ( வயது 23) கூலி தொழிலாளி. இவர் தனது குழந்தை பருவத்திலே பெற்றோர்களை இழந்து விட்டார், இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். குடியை அவரால் மறக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது பாட்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது பாட்டி காவேரி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.