கோவை சவுரிபாளையம், எல்லை தோட்டம், இந்திரா நகரை சேர்ந்தவர் மதன் ( வயது 41) இவர் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் எஸ்ஓ பங்க் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி இவரதுஸ்கூட்டர் மீது மோதியது இதில் மதன் படுகாயம் அடைந்தார் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக செப்டிக் டாங்க் லாரி டிரைவர் நஞ்சுண்டாபுரம் மனோஜ் குமார் ( வயது 33) மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0