பள்ளி சீருடையில் தலைக்கேறிய போதையில் தள்ளாடியபடி சாலையில் விழும் பள்ளி மாணவன்- அண்ணாமலை கடும் எச்சரிக்கை ..!

மிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை மற்றும் மதுபான விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே, காவல்துறையினர் உடனடியாக கஞ்சா புழக்கத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இதனிடையே, மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே தலைக்கேறிய மது போதையில் தள்ளாடியபடி சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு செயல்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? பேராசை, ஊழல் மற்றும் தவறான நிர்வாகமே அனைத்தும் இணைந்தது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.