நிலக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. நலமான சமூகத்துக்காக முத்து பல்நோக்கு மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.

நிலக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பேரணி நலமான சமூக த்துக்காக முத்து பல்நோக்கு மருத்துவமனை சார்பில், செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை முத்து பல்நோக்கு மருத்துவமனை மற்றும் நிலக்கோட்டை காவல் துறையுடன் இணைந்து நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் சாலை பாதுகாப்புகாக ஆம்புலன்ஸ் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில், சாலை விபத்துகளை குறைக்க அனைவ ரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மக்கள் தங்களின் பாதுகாப்பை முன்னிலைப் படுத்துவதை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முத்து பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஹரிஷ் அழகுராஜ், மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணரான மருத்துவர் ஆர்த்தி ஹரிஷ், மருத்துவ மனையின் நிர்வாகி மனோஜ்குமார், மருத்துவமனை பணியாளர்களுடன் மற்றும் நிலக்கோட்டை காவல்துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மருத்துவர்கள் ஹரிஷ் அழகுராஜ், ஆர்த்தி ஹரிஷ் ஆகியோர் பேசியதாவது, சாலை விபத்துகள் நம் வாழ்க்கையை ஒரே நிமிடத்தில் மாற்றி விடும். இதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு வரும் சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும். உங்கள் பாதுகாப்பை நீங்கள் முன்னிலைப்படுத்தினால், உங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றனர்.

படம் விளக்கம்:-

நிலக்கோட்டைமுத்து பல்நோக்கு மருத்துவமனை மற்றும் நிலக்கோட்டை காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை நடத்தினர்.