கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர்கிருஷ்ணன் (வயது 75) ஒரு வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் உள்ள சிபிஐ அதிகாரி வினய் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார் .பெடக்ஸ் கூரியர் நிறுவனத்திலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் ,அதில் போதை பொருள் இருப்பதாகவும் தங்களின் ஆதார் எண் அதில் இடம் பெற்று இருப்பதால் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வீடியோ காலில் வந்து ம் பேசி உள்ளார். அப்போது உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கைது நடவடிக்கையை தவிர்க்க வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அவர் தனது வங்கி கணக்கு விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவர் தாங்கள் அனுப்பும் வங்கி கணக்கிற்கு உங்களிடம் இருக்கும் அனைத்து தொகையும் அனுப்பி வைக்க வேண்டும். சரிபார்ப்பு முடிந்ததும் அந்த தொகையை உங்களுடைய வங்கி கணக்கிற்கு திரும்பச் செலுத்தப்படும் என்று தெரிவித்தார் .அதனை நம்பிய கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூறியபடி வங்கி கணக்கிற்கு ரூ35 லட்சத்தை அனுப்பி உள்ளார். அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. அப்போது தான் மோசடி செய்யப்பட்டதை கோபாலகிருஷ்ணன் அறிந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருபவர் பிராங்கிளின் . ஓய்வு பெற்ற ராணுவ வீரர் .இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக ஒரு போன் வந்தது .அதில் பெடக்ஸ் கூரியரில் போதை மருந்து பார்சல் உங்கள் பெயரில் வந்துள்ளது.அது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலி எப். ஐ. ஆர் நகல், மற்றும் கைதுவாரண்டையும் வீடியோ கால் மூலம் பிராங்கிளினிடம் காண்பித்து மிரட்டினார் .தங்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதையும் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார். அதை நம்பிய பிராங்கிளின் தான் ஓய்வு பெற்ற போது கிடைத்த ரூ. 25 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அந்த பணத்தையும் சுருட்டிய மர்ம சாமிகள் அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0