பேர்ணாம்பட்டு: இமயமலைகளில் மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூ, தென் அமெரிக்கா மெக்சிகோ நாடுகள் தான் இந்த பிரம்ம கமல பூவின் பிறப்பிடம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய இந்த பிரம்ம கமலம் பூ.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காமராஜ் நகர் பகுதியில் உள்ள மார்கபந்து என்பவர் வீட்டில் இரவு 8 மணிக்கு மலர துவங்கி ஒன்பது மணிக்கு இதழ்களை விரித்து அழகாக பூத்திருந்தது. இந்தப் பூ இரவில் மட்டுமே மலரும் தன்மையை கொண்டது. இதில் மூன்று வகை பூக்கள் உண்டு. மேலும், பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. பிரம்மா ஆசீர்வாதம் செய்ததால் பூலோகத்தில் இப்பூ தோன்றியதாகவும், கேட்ட வரத்தை கொடுக்கும் பிரம்ம கமலம் என்றும் புராணங்கள் கூறுகிறது. மேலும் சிவனுக்கு உகந்த பூ என்பதால் இந்த பூவை பூஜை செய்து சிவனுக்கு மலராக வைக்கின்றனர். இது குறித்து மார்கபந்து குடும்பத்தினர் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு எங்கள் உறவினர் வீட்டிலிருந்து செடியை சிறிதாக உடைத்து வந்து வீட்டில் நட்டு வைத்தோம். அதனைத் தொடர்ந்து இன்று இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு குடும்பத்துடன் பூஜை செய்து வழிபட்டோம் என்று தெரிவித்தனர்..