கோவை அருகே தோட்டத்தில் மானை விழுங்கிய மலைப்பாம்பு உயிருடன் பிடிபட்டது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி,விவசாயி. இவரது தோட்டத்தில் மானை விழுங்கிய மலைப்பாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியில் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு தலைமை நிலைய அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் மற்றும் சுரேஷ்குமார், பணியாளர்கள் வெற்றிவேல், வேல்முருகன், மோகன், முகமது அலி, ஜுபேர், நாராயணன் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.