நிலக்கோட்டை செம்பட்டியில் தனியார் பேருந்து மோதி, முன்னாள் சென்ற மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சாரம் செல்கிறது. இந்நிலையில், செம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து சித்தையன்கோட்டை, செங்கட்டான்பட்டி, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் நூற்பாலைகளுக்கு (மில்) 22 ஆயிரம் ஓல்ட் மின்சாரம் செல்கிறது. அதற்கான மின் கம்பங்கள் செம்பட்டி துணை மின் நிலையம் முன்பு, திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை மாலை குமுளியில் இருந்து செம்பட்டி, திண்டுக்கல் வழியாக கர்நாடகாவிற்கு மினி லாரி சென்றது. அந்த மினி லாரி துணை மின் நிலையம் முன்பு, திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து, மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, துணை மின் நிலையம் முன்பு இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில், மின்கம்பம் முழுமையாக உடைந்து விழுந்தது. இதனால், தனியார் நூற்பாலைகளுக்கு (மில்) சென்ற மின்சாரம் தடைப் பட்டது. இந்த விபத்தில், மினி லாரி டிரைவர் குமுளியைச் சேர்ந்த பைசெல் (34) கிளீனர் அதுநான் (31) ஆகிய இருவரும் சிறுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.