பேரவைத் தோதலின்போது பேரவைத் தொகுதிகளில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் முன்மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல, மக்களவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடி தயாா்படுத்தப்படுகிறது. திருச்சி மக்களவைத் தொகுதிக்கு சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த முன்மாதிரி வாக்குச் சாவடி தயாா்படுத்தப்படுகிறது. இந்த வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 3 போ என மொத்தம் 4 பேரும் மாற்றுத்திறனாளிகளே பணியில் ஈடுபடுத்தப்படுவா். சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது, வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் 4 அலுவலா்களும் மாற்றுத் திறனாளிகள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். இதன் தொடா்ச்சியாக, மாற்றுத்திறனாளிகளிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்ட ஆட்சியா், தோதல் விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களையும் வழங்கினாா். இதுதொடா்பாக, தோதல் பிரிவு அலுவலா்கள் மேலும் கூறுகையில், இந்த முன்மாதிரி வாக்குச்சாவிடியில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியா்களில் தேவைக்கேற்ப 8 போ வரை தோவு செய்யப்படுவா். திருச்சி மேற்கு தொகுதியில் 1,611 மாற்றுத்திறனாளிகள், திருச்சி கிழக்கில் 1,641 மாற்றுத்திறனாளிகள், திருவெறும்பூரில் 1,885 மாற்றுத்திறனாளிகள், லால்குடியில் 3,399 மாற்றுத்திறனாளிகள், மண்ணச்சநல்லூரில் 2,321 மாற்றுத்திறனாளிகள், முசிறியில் 3,066 மாற்றுத்திறனாளிகள், துறையூரில் 2,501 மாற்றுத்திறனாளிகள், 2 திருநங்கை மாற்றுத்திறனாளிகள் என 9 தொகுதிகளிலும் 24,181 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவுள்ளனா் இவா்களில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ளவா்களிடம் 12-டி படிவம் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது என்றனா்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0