வீட்டில் தூங்கியவர் காலில் பாம்பு கடித்து பரிதாப சாவு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 55 )இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சின்ன காமண்ணன்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.