வால்பாறையில் காட்டுயானை துரத்தி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி காட்டுயானை துரத்தியதில் படுகாயமடைந்த சந்திரன் [வயது 62] என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.