பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி பணம் கொள்ளை. 2 பேர் கைது.

கோவை மதுக்கரை குரும்பபாளையம் ரோட்டில் உள்ள அன்னை நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பிரபு ( வயது 24 )இவர் நேற்று முன்தினம் மாலையில் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த இருவர் பைக்கை வழிமறித்துபிரபுவிடம்பணம் கேட்டனர். கொடுக்க மறுத்ததால் இவரை கத்தியால் குத்தினர். பின்னர் “கூகுல் பே ” மூலம்அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்புமாறு மிரட்டி னார்கள். அவரிடம் இருந்த பணம் 23 ஆயிரத்து 950 ரூபாய் “கூகுல் பே ” செய்தார் . பின்னர் கொள்ளை யர்கள் இருவரும்தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பிரபு சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வெள்ளலூர் பக்கம் உள்ள கோண வாய்க்கால் பாளையம் ,சீனிவாச நகரை சேர்ந்த மணிகண்டராஜன் மகன் நிதிஷ் ( வயது 21) சரவணம்பட்டி கீரணம் புதூர், அண்ணா நகரைச் சேர்ந்த அனில் குமார் மகன் கவுதீஸ்வரன் ( வயது 22)ஆகியோரை கைது செய்தார். பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.