கர்நாடகாவில் அதிவேகமாக பரவும் புதிய வகை வைரஸ் – பீதியில் மக்கள்..!

ர்நாடகவில் ‘எச்3.என்.2’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

சமீபத்தில் இந்தியாவில் எச்3.என்.2′ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் முன்னேச்சரிக்கையுடம் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த வைரசின் முக்கிய அறிகுறிகள் ஒன்று, நீண்ட நாட்களுக்கு இருமல், காய்ச்சல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

பெங்களூருவில் இந்த புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று கர்நாடகத்தில் 95 பேருக்கும், அதில் பெங்களூரு நகரில் மட்டும் 79 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

100 நாட்களுக்கு பிறகு பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவல் சற்று அதிகரித்துள்ளது.

இது அரசுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 291 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் இதனை தடுப்பது குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.