சிங்காநல்லூரில் ரூ.141கோடியில் புதிய மேம்பாலம. 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் தொலைதூர பஸ்கள், திருச்சி ரோட்டில் ஒண்டி புதூரில் இருந்து திரும்பும் பஸ்கள், கோவை பீளமேடு செல்லும் வாகனங்கள், உக்கடம் செல்லும் வாகனங்கள் என நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. சிங்காநல்லூர் சிக்னல் அருகே திருச்சி ரோட்டில் தற்போது ” யூ டேர்ன் ” வசதி இருந்தாலும் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் சிங்காநல்லூ ரில் புதிய மேம்பாலம் கட்ட கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடபட்டது..ஆனால் மெட்ரோ ரயில் திருச்சி சாலை வழியாக போகும் என்று கூறப்பட்டதால் அந்த பணி தாமதமானது. தற்போது அவிநாசி ரோடு, சத்தி ரோட்டில் தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .எனவே சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது இதற்காக 110 கோடியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. திருச்சி ரோடு உழவர் சந்தையில் இருந்து பஸ் நிலைய சந்திப் பையும் தாண்டி ஜெய் சாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடபட்டுள்ளது… ரூ 110கோடியில் மேம்பாலம் கட்ட 3 முறை டெண்டர் விடப்பட வேண்டும். இதற்கு செலவு அதிகமாகும் என்று கூறி யாரும் டெண்டர் கோர வில்லை. இந்த நிலையில் ரூ.141 கோடியில் செலவு தொகை அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது .இதற்கான டெண்டர் கோருவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இந்த டெண்டர் வருகிற 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. டெண்டர் பணி முடிந்ததும் உடனடியாக மேம் பால பணியை தொடங்க நெடுஞ்சாலை துறை தயாராகி வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் மேம்பாலத்தை கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.