கோவை சூலூர் பக்கம் உள்ள சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி சங்கீதா (வயது 29) இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரசவத்துக்காக தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார்.பிரசவம் முடிந்த பிறகும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நந்தகோபால் தனது உறவினர் சூர்யாவுடன் சங்கீதா வீட்டுக்கு சென்றார். தன்வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவர் மறுத்ததால் சங்கீதாவையும், அவரது தாயார் பழனியம்மாளையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சங்கீதா சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மாதவன் இது தொடர்பாக விசாரணை நடத்தி கணவர் நந்தகோபால் ,சூர்யா ஆகியோர் மீது 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0