மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற தாய்கீழே விழுந்து சாவு.

கோவை கவுண்டம்பாளையம்,வடக்கு அவுசிங் யூனிட்,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோபால் ( வயது 41)இவர் தனது தாயார் அய்யம்மாளுடன் (வயது 71)ஸ்கூட்டரில் அன்னூர் பக்கம் உள்ள குரும்ப பாளையம் – வாகராயம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.பச்சாபாளையம் பஞ்சாயத்து அலுவலக வளைவில் சென்ற போது அங்குள்ள வேகத்தடையில் ஸ்கூட்டர் மோதி பின்னால் இருந்து அய்யம்மாள் தவறிகீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டர் ஓட்டி வந்த மகன் கோபால் (வயது 41) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.