கோவை சூலூர் பக்கம் உள்ள கரவழி மாதப்பூர், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி தங்கமணி ( வயது 53) நேற்று இவர் தனது மகன் பிரதீப் குமாருடன்( வயது 32) திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். ரோட்டில் கிடந்த தங்கமணி மீது பஸ் சக்கரம் ஏறியது. அவர் அதே இடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார் . இதுகுறித்து பிரதீப்குமார் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் திருப்பூர் மாவட்டம் உடுமலை சேரன் நகர் சேர்ந்த பஸ் டிரைவர் முருகன் (வயது 52) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0