கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் மில் ரோட்டை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகன் பத்மநாபன் ( வயது 29 )இவர் நேற்று தனது தாயார் கிருஷ்ணவேணி யுடன் ( வயது 53) பைக்கில் பொள்ளாச்சி – தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஏரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகேசென்ற போது வந்த நாய் ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. இதனால் பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கிருஷ்ணவேனி இறந்தார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் பைக் ஓட்டி வந்த மகன் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0